உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ் மீது கல் வீச்சு: போதை ஆசாமி கைது

அரசு பஸ் மீது கல் வீச்சு: போதை ஆசாமி கைது

கருமத்தம்பட்டி;அரசு பஸ் மீது கல் வீசி தாக்கிய நபர், சிறையில் அடைக்கப்பட்டார்.சேலத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ரோட்டில் நடந்து சென்ற நபர், பஸ் மீது கல்லை வீசியுள்ளார். இதில் கண்ணாடி சேதம் அடைந்தது. பஸ்சை நிறுத்திய டிரைவர், பயணிகள் மற்றும் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்நபரை துரத்தி சென்று பிடித்து, கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்ந பர், சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, 50, என்பதும், மது போதையில் பஸ் மீது கல் வீசியதும் தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணியை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை