உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோவை: தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் 2026 – 28ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு, தைரோகேர் நிறுவனர் வேலுமணி தலைமை வகித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்று நட்டு, டெமாவின் மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். டெமா அமைப்பின் தலைவராக ராஜன், செயல் துணை தலைவராக செந்தில்குமார், பொது செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக கவுதம், இணை செயலாளராக ஆதிகேசன் ஆகியோர் பதவியேற்றனர். பொது செயலாளர் செந்தில்குமார் பேசுகையில்,‘‘தமிழகம் முழுவதும் நிகழ்ச்சி மேலாண்மை துறையை வலுப்படுத்தும் திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்,’’ என்றார். விழாவில் முன்னாள் நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை