உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் 

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் 

கோவை;தமிழ்நாடு தொழிலாளர் துறை ஓய்வூதியர்கள் நலச்சங்கம், கோவை மண்டல பொதுக்குழு கூட்டம் காந்திபுரம் புளூஸ்டார் ஓட்டலில் நேற்று நடந்தது. மண்டலத் தலைவர் சேகர் தலைமை வகித்தார்.திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான, 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்த உடனேயே, மாநில அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வெளியிட வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம், அதற்கு மேல் தகுதியுள்ள ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மண்டலச் செயலாளர் மல்லீஸ்வரன், பொருளாளர் சந்திரசேகர், துணை தலைவர் தாகிர் அலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை