மேலும் செய்திகள்
மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு ஆக.24ல் நடக்கிறது
18-Aug-2024
கேத்தரினா இரண்டாவது இடம்
09-Aug-2024
கோவை:கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில், முதியோர்க்கான தடகளப் போட்டி, வரும் 29ம் தேதி, நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சிறப்பு பிரிவாக ஜூனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் 25 --29 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடை பயண போட்டிகள், ஓட்டப்பந்தய போட்டிகள், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஜூனியர் மாஸ்டர்ஸ் பிரிவில், ஒருவர் தலா இரண்டு போட்டியிலும், மாஸ்டர்ஸ் பிரிவில் ஒருவர் மூன்று போட்டியிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பவர்கள், மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். பங்கேற்க விரும்புகிறவர்கள் வரும் 27ம் தேதிக்கு முன், தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இப்போட்டி நடக்கும் தேதியன்று நேரு ஸ்டேடியத்தில், நேரடியாக பெயர் பதிவு செய்யலாம். இதற்கென சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, மாஸ்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராதாமணியை, 94425 -82787 தொடர்பு கொள்ளலாம்.
18-Aug-2024
09-Aug-2024