உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கம்பம் நட மறுப்பு இழப்பீடு வழங்க உத்தரவு

மின் கம்பம் நட மறுப்பு இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை:புதிய மின் கம்பம் கோரி விண்ணப்பித்த மனுவை நிராகரித்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. சரவணம்பட்டி, கீரணத்தம் நியூ ரோட்டில் வசித்து வருபவர் மாணிக்கராஜ். இவரது வீட்டுக்கு, 120 அடி துார மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதிக துாரத்திலிருந்து இணைப்பு வருவதால், சர்வீஸ் ஒயர் நீளமாக இருந்ததால், ஆபத்தான நிலையில் கீழே தொங்கி கொண்டு இருந்தது. ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி ஒயரில் உரசி, வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வந்தது. இதனால், வீட்டிற்கு அருகில் புதிய மின்கம்பம் நட்டு இணைப்பு கொடுக்குமாறு சரவணம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் 2022, அக்., 27 ல் விண்ணப்பித்தார். ஆனால், பல்வேறு காரணங்கள் கூறி, புதிய மின் கம்பம் நடாமல் விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதனால், மின்வாரியம் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ