உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியாவில் பேக்கேஜிங் கண்காட்சி இன்று துவக்கம்

கொடிசியாவில் பேக்கேஜிங் கண்காட்சி இன்று துவக்கம்

கோவை:கோவையில் அனைத்து சிறு, குறு தொழில்நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு பயன்படும், '3பி 2024 ' -'ரா-மேட்-2024' ஆகிய இரண்டு கண்காட்சிகள், கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று துவங்குகிறது. டில்லி தேசிய சிறு தொழில் கழக தலைமை பொது மேலாளர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். இக்கண்காட்சி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன. '3பி' எக்ஸ்போ பிரிவின் கீழ், பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங் துறை சார்ந்த பல்நோக்கு உற்பத்தியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.'ரா- மேட்' கண்காட்சியில், சீட், பிளேட், பைப், பெலட், பவுடர், போல்ட், நட்ஸ், கேபிள், டேப், வெல்டிங் ஒயர், கிரைண்டிங் வீல், காட்போர்டு, வால்பேப்பர், கெமிக்கல்ஸ், பப்பிள் ரேப்ஸ், ரெட் ஆக்சைடு, எனாமல் உள்ளிட்ட பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் சார்ந்த, உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.வரும், 12ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தொழில்நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி கல்விநிறுவனங்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பயன் அளிக்கும் வகையில் அமையும் என, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ