உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘தி.மு.க. பாதையில் த.வெ.க. அரசு’

‘தி.மு.க. பாதையில் த.வெ.க. அரசு’

கோவை: ‘தி.மு.க., பாதையிலேயே த.வெ.க., அரசு செல்கிறது’ என கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர்(சி.ஐ.டி.யூ.,) சுங்கம்–1 கிளை முன்பு ஸ்டாலின், மோடி, விஜய் கார்ட்டூன்கள், வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேனரில்,‘தி.மு.க., ஆட்சியில் தனியார் மயம், தாராள மயம், பொதுத்துறை அழிப்பு, கல்வி, சுகாதாரம் வணிக மயம், ஒப்பந்தம், பணி பாதுகாப்பின்மை, கார்ப்பரேட் ஆதரவு ஆகிய நிலைப்பாடுகளை குறிப்பிட்டு, ‘மாறியது முகங்கள்தான்; மாறவில்லை அரசின் கொள்கை’ என, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் புலம்பல் வெளிப்பாடு காட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் கூறுகையில், ‘அரசு சொத்துக்கள் தனியாருக்கு மாற்றப்படுகிறது. அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஒப்பந்த முறையை கொண்டு வருகின்றனர். இது சமூக நீதிக்கு புறம்பானது. தி.மு.க. பின்பற்றிய அதே கொள்கையை அதே பாதையை த.வெ.க. பின்பற்றுகிறது. இடஒதுக்கீடு பற்றி பேசும் இதே அரசு, ஒப்பந்த முறையில் இட ஒதுக்கீடு இல்லை என இரண்டு பாதைகளில் பயணிக்கிறது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை