உள்ளூர் செய்திகள்

மக்கள் மனசு பேட்டி

விஜய் மீது நம்பிக்கை 50 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் கட்சி துவக்கிய நடிகர் எம்.ஜி.ஆர். சிறந்த ஆட்சி அளித்தார். ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டார். எனவே எம்.ஜி.ஆர். போல் நடிகர் விஜயும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவார் என்னும் எதிர்பார்ப்பில் ஏராளமானோர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க. அரசு குறித்து நடிகர் விஜய் கூறிய புகார்கள் பொதுமக்களிடம் எடுபட்டு விட்டன. எனவே ஒரு தரப்பினர் தி.மு.க.வை புறக்கணித்து விட்டனர். – கலைச்செல்வி, அன்னூர். மக்கள் மாற்றம் விரும்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகரித்து விட்டது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என மக்கள் காத்திருந்தனர். இந்த சமயத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் வந்தது. அமோக ஆதரவு தந்துள்ளனர். தி.மு.க.வின் முறையற்ற நிர்வாகம், லஞ்சம் ஆகியவையே த.வெ.க.வின் வெற்றிக்கு காரணம். – செல்வராஜ், கதவுகரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை