மேலும் செய்திகள்
தொழிற்சாலை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
31-Jan-2025
வால்பாறை,; வால்பாறையில், டிரைவர் ஆற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது குரங்குமுடி எஸ்டேட். இங்குள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சதீஷ்குமார்,24. தனியார் எஸ்டேட்டில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் வால்பாறை நகரில் நேற்று முன்தினம் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு, மாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.வீடு செல்லும் வழியில், ஸ்டேன்மோர் ஆற்றுப்பகுதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள அவர், நண்பரிடம் கடைக்கு போய் சிகரெட் வாங்கி வரும்படி கூறியதாக தெரிகிறது. கடைக்கு சென்ற நண்பர் திரும்பி வந்த போது, சதீஸ்குமார் அங்கு காணவில்லை.இது குறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஸ்டேன்மோர் ஆற்றுப்பகுதியில் தண்ணீரில் மிதந்த சதீஷ்குமாரின் உடலை தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான வீரர்கள் மீட்டனர். நண்பருடன் சென்றவர் ஆற்றில் மர்மான முறையில் இறந்தது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
31-Jan-2025