ரோட்டில் பள்ளம்; ஓட்டுநர்கள் திணறல்
நெகமம் : காட்டம்பட்டி ரோட்டில் இருந்து மஞ்சம்பாளையம், வடசித்துார் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.பெரியகளந்தை, காட்டம்பட்டி செல்லும் ரோட்டில் இருந்து மஞ்சம்பாளையம், வடசித்துார் செல்லும் இணைப்பு ரோட்டில், தினமும் அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இதில், வடசித்தூர் செல்லும் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது.இந்த ரோட்டின் நடுவே சேதமடைந்து, தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், மரக்குச்சிகள் வைத்து அதில் சாக்கு வைத்துள்ளனர்.இதனால், இந்த ரோட்டில் கார் மற்றும் பெரிய அளவிலான வாகனங்களில் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த ரோட்டில் ஏற்பட்ட குழியை விரைவில் சரி செய்ய வேண்டும்.மக்கள் கூறுகையில், 'இந்த ரோடு கடந்த மூன்று மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் பலர் விளை பொருட்களை ஏற்றிச்செல்ல பெரிய அளவிலான வாகனங்களில் செல்வதால் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பலர் சிரமப்படுகின்றனர். எனவே, இதை விரைவில் சரி செய்ய வேண்டும்,' என்றனர்.