உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய பென்ஷன் திட்டம் என்னவானது தேர்தலுக்குள் நிறைவேற்றுங்க முதல்வரே! ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கேட்கிறது

பழைய பென்ஷன் திட்டம் என்னவானது தேர்தலுக்குள் நிறைவேற்றுங்க முதல்வரே! ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கேட்கிறது

கோவை;'தமிழக முதல்வர் கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த, பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதியை, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்' என, கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது குறித்து, கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் பலராமன் கூறியதாவது:மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் திட்டமாகும். பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள், இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர். காரணம், இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு, பென்ஷன் உண்டு என்பது உறுதியாகி உள்ளது.ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர்களை பொருத்தவரை, பென்ஷனுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என, தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது பற்றிய பேச்சே இல்லை. தமிழக அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக முதல்வர் மீண்டும் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆகவே, முதல்வர் தனது வாக்குறுதியை, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ