உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் சர்வதேச பள்ளி விளையாட்டு விழா

ரத்தினம் சர்வதேச பள்ளி விளையாட்டு விழா

போத்தனூர்;ரத்தினம் சர்வதேச பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.ஈச்சனாரி அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ரத்தினம் கல்வி குழும இயக்குனர் ஷீமா, முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம் தலைமை வகித்தனர். இந்திய தடகள வீரர் பிரதீப் ராஜ்குமார் முதன்மை விருந்தினராக பங்கேற்று, விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.முன்னதாக, பள்ளி முதல்வர் ஆஷ்மி வரவேற்றார். தொடர்ந்து ஏக்தா, ஜட்டன், ஷிருஷ்டி, யுக்தி என நான்கு அணிகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, 100, 200, 400 மீட்டர் ஓட்டங்கள் மற்றும் தொடர் ஓட்டம், கராத்தே, சிலம்பம், ஜும்பா மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை நடந்தன. பெற்றோருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டி முடிவில் சிருஷ்டி அணி, 437, ஏக்தா, 391, யுக்தி. 361 மற்றும் ஜட்டன், 291 புள்ளிகள் பெற்றன. தனி மற்றும் குழு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிரதீப் ராஜ்குமார் பரிசு வழங்கினார். பள்ளி செயல்பாட்டு பிரிவு தலைவர் அபினயா சங்கரி நன்றி கூறினார்.ரத்தினம் ஸ்போர்ட்ஸ் இயக்குனர் ராமன் விஜயன், ரத்தினம் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் ரோஷிணி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி