உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல கால்பந்து போட்டி ஆர்.வி.ஜி., மாணவர்கள் வெற்றி     

மண்டல கால்பந்து போட்டி ஆர்.வி.ஜி., மாணவர்கள் வெற்றி     

உடுமலை;மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், கோவையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளடக்கிய மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இரண்டு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ஜூலியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ