ரெஸ்ட் தான் உடலுக்கு பர்ஸ்ட்; ரெஸ்ட் - ஓ- போம் தரும் பெஸ்ட்
ஓடியாடி... களைத்து வீட்டுக்கு செல்லும் போது, நிம்மதியான உறக்கத்தை மனம் நாடும். அடுத்த நாள் தொடர் ஓட்டத்துக்கான தெம்பு, இரவில் கண் விழிக்காத உறக்கம் கொடுக்கும். அப்படியான உறக்கத்துக்கு, அத்தியாவசிய தேவை மெத்தைகள் மற்றும் போர்வைகள்.தரமான, முன்னணி நிறுவனங்களில் மெத்தைகளையும் போர்வைகளையும், வாடிக்கையாளர்களுக்கு தருவதில் முத்தாய்ப்பாக இருக்கிறது 'ரெஸ்ட் - ஓ- போம்'. குறிப்பிட்ட ரகங்களை தேர்வு செய்யும் போது, அதை மட்டுமே கொடுக்காமல், தலையணை, படுக்கை விரிப்புகள், 'சில்'லென்ன காலநிலை இருக்குமானால், மேனிக்கு தொந்தரவு கொடுக்காத போர்வைகள் போன்றவற்றை இலவசமாக தருகின்றனர். இவையெல்லாம் தாலாட்டும் இதமான சூழலுக்கு நிச்சயம் கொண்டு போகும். காலையில் எழுந்திருக்கவும் மனம் வராது.அப்படியான உற்சாகம் தரும். எல்லா வகை அளவுகளிலும், படுக்கை விரிப்புகள் வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம்.தவிர, மருத்துவமனைகளுக்கு தேவையான மெத்தைகளும், மொத்தமாகவும் கிடைக்கின்றன. 'விசிட்' பண்ணுங்க... 'செலக்ட்' பண்ணுங்க...! இடம்: 108, சத்தியமூர்த்தி சாலை, ராம்நகர், கோவை. 0422 - 2230702, 98430 23448, 96290 83912.