உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் கத்தியை காட்டி, வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையம் டாஸ்மாக் கடை பாரில் கேசியராக வேலை பார்த்து வருபவர் ராஜாராம்,29. இவர் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த நபர் ராஜாராமை கத்தியை காட்டி, மிரட்டி அவரிடம் இருந்த, 300 ரூபாய் பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்தவர் சத்யன்,32, திருப்பத்தூர், நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ