உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுண்டானா, தார் சாலை பணி; கோட்ட பொறியாளர் ஆய்வு

ரவுண்டானா, தார் சாலை பணி; கோட்ட பொறியாளர் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் மற்றும் மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதிகளில், மேம்பாட்டு பணிகள் மூன்று கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பகுதியில் ரோடு விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்காக, மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.இதை தொடர்ந்து, தற்போது ரவுண்டானா மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் ஆய்வு செய்தார். பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, பொள்ளாச்சி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'நெடுஞ்சாலைத்துறையில் பணிகள் முன்னேற்றம் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டங்கள், அமைச்சர் வேலு தலைமையில் நடத்தப்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ