உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேலத்துக்கு ‘மெமு’ ரயில் சேவை தேவை

சேலத்துக்கு ‘மெமு’ ரயில் சேவை தேவை

கோவை: கோவை–மேட்டுப்பாளையம் இடையே சாதாரண பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றுமாறு தொடர் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் கோவை–மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது. போத்தனுார் ரயில் பயனாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது: கோவையில் ஏற்கனவே மெமு ரயில் பெட்டிகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த காலங்களில் கோவையில் இருந்து சேலத்துக்கும், திண்டுக்கல் வரையும் மெமு ரயில்கள் இயக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அச்சேவைகள் நிறுத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் ‘மெமு’ ரயிலுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 8 பெட்டிகளை சென்னைக்கு திருப்பி அனுப்பாமல், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி வழியாக திண்டுக்கல் அல்லது  சேலத்துக்கு புதிய மெமு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டத்திடம் முறையிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலன்
ஆக 11, 2026 14:25

இதைப் பற்றிய முடிவை 12 பெட்டி சேவை துவக்கத்திற்கு முன்பே எடுத்து இருக்க வேண்டும்.இப்போதும் என்றும் கெட்டு விட வில்லை. இந்த 8பெட்டி வண்டியை ஒரு முறை சேலம்/ஒரு முறை திண்டுக்கல் வழியில் பயன் படுத்தலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை