உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருஷ்ண ஜெயந்தியன்று செயல்பட்ட பள்ளி

கிருஷ்ண ஜெயந்தியன்று செயல்பட்ட பள்ளி

கோவை;புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளி, கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினத்தில் செயல்பட்டதால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாக்கினர்.அரசு விடுமுறை தினத்தில் பள்ளி செயல்படுவது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் கிடைத்தது. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, விடுமுறை அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, பள்ளி நிர்வாகம், பகல் 12:00 மணியளவில் விடுமுறை அறிவித்து, பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. பெற்றோர்கள் அவசர அவசரமாக குழந்தைகளை அழைத்துச் சென்றனர். உடனடியாக வர முடியாத சிலரின் குழந்தைகள், பகல் ஒரு மணி வரை, பள்ளி வளாகத்திலேயே காத்திருக்க நேரிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி