மேலும் செய்திகள்
தேனீ வளர்க்க அழைக்கிறது பல்கலை
05-Feb-2025
பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) நான்கு நாட்களுக்கு குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படுகின்றன.தொழில் பயிற்சி நிலையத்தில், 'காரின் அடிப்படை பராமரிப்புகள்' என்ற தலைப்பில் நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் வீதம் நான்கு நாட்களுக்கு, 16 மணி நேரம் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சிகள் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் வாயிலாக அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு அணிக்கு, 20 நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு வயது வரம்பு, 18 வயதுக்கு மேல் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் காரின் பொதுவான பாகங்கள், இயங்கும் விதம், பராமரிப்பு, பாகங்களை மாற்றுதல், பேட்டரி கண்காணித்தல், வைப்பர், முகப்பு விளக்குகள், பெல்ட் பராமரிப்பு, எலக்ட்ரிக் தொழில்நுட்பங்கள், சென்சார் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர விரும்புபவர்கள், 94434 80879 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கோவை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
05-Feb-2025