உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை

எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை

கோவை:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 54; எஸ்.எஸ்.ஐ.,யான இவர், 1997 முதல் போலீஸ் துறையில் உள்ளார். கடந்த, 2024 ஆக., மாதம் முதல் கோவை மாவட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவில் ஆய்வாளரின் டிரைவராக பணியாற்றி வந்தார்.இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில், மனைவி கல்யாணியுடன் கோவைப்புதுாரில் வசித்தார். நேற்று முன்தினம் அவிநாசி சாலையில் உள்ள வ.உ.சி., மைதானத்திற்கு சென்ற சொக்கலிங்கம், அவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த மனைவியின் சேலையை பயன்படுத்தி அங்கிருந்த ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரேஸ்கோர்ஸ் போலீசார் சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ