மேலும் செய்திகள்
வடமதுரை....சுதந்திர தின விழா
16-Aug-2024
கோவை : கோவையின் முன்னணி கல்வி நிறுவனமான ஸ்பெக்ட்ரம் நார்தர்ன் லைட்ஸ் பள்ளி, தனது பிரத்யேக மழலையர் பள்ளியை துவக்கியுள்ளது.சிறப்பு விருந்தினர்கள் லிட்டில் ஜீப்ரா நிறுவனர் அனுஷா மற்றும் சங்கீதா ஆகியோர் மழலையர் பள்ளி வளாகத்தை திறந்து வைத்தனர்.பள்ளியின் தாளாளர் விக்னேஷ் கூறுகையில், ''அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தை மழலையர் பள்ளி கொண்டுள்ளது. பள்ளியில் எதிர்வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. விஜயதசமி சேர்க்கை விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். விபரங்களுக்கு, 94801 81818 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.பள்ளி தலைவர் மயில் சாமி, முதன்மை முதல்வர் அனிப்ரியா, முதல்வர் லட்சுமி நிகழ்வில் பங்கேற்றனர்.
16-Aug-2024