ஸ்ரீ சவுடேஸ்வரி அறக்கட்டளை பொன்விழா
கோவை; ஸ்ரீ சவுடேஸ்வரி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் துடியலூர் அருகில் உள்ள டார்ஷா லக்ஜூரி ரெசார்ட்டில் நடந்தது. அறக்கட்டளையின் தலைவர் வீரையன் விழாவிற்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் தொழிலதிபர் அழகரசன் கலந்துகொண்டார்.செயலாளர் ராஜ கோபால், பொருளாளர் தங்கராஜூ உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். அறக்கட்டளையின் தலைவர் வீரையன், அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி ஹால், செல்வபுரம் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கல்வீரம்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆகியவை மிகச் சிறப்பாக செயல்படுவதாகத் தெரிவித்தார். அறக்கட்டளை சார்பாக நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி நிதியுதவி மற்றும் மருத்துவ நிதியுதவிகள் வழங்கி வருவதாகவும் பேசினார்.அறக்கட்டளையின் நிறுவனர்கள் குடும்பத்தார், வளர்ச்சிக்கு உதவிய நிர்வாகிகள், நிர்வாகசபை உறுப்பினர்கள் விழா மேடையில் கவுரவப்படுத்தப்பட்டனர்.