உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘ஸ்டார் 3.0’ விழிப்புணர்வு பயிற்சி

‘ஸ்டார் 3.0’ விழிப்புணர்வு பயிற்சி

மேட்டுப்பாளையம்: மாநில பத்திரப்பதிவுத் துறையால், ஸ்டார் 3.0 என்ற நவீன டிஜிட்டல் மென்பொருள் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்லாமல், ஆன்லைன் வழியே பத்திரங்களை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. பொதுமக்கள், பத்திர எழுத்தாளர்கள், நில உரிமையாளர்கள் என பலருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று மேட்டுப்பாளையம் தனியார் மண்டபத்தில் மேட்டுப்பாளையம், அன்னுார் சார் பதிவாளர் அலுவலகங்கள் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. சார்பதிவாளர்கள் ராமமூர்த்தி, நாகராஜ் ஆகியோர் ஸ்டார் 3.0 திட்டம் குறித்து விளக்கினர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை