உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை முன்னெச்சரிக்கை பணி கள் குறித்து ஆய்வு 

மழை முன்னெச்சரிக்கை பணி கள் குறித்து ஆய்வு 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி உட்கோட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கைக்காக, 3,500 மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், இரும்பு தடுப்புகள், இயந்திரங்கள், கருவி மற்றும் தளவாடங்கள் தயார் நிலையில், தாராபுரம் ரோட்டில் உள்ள பெரியாக்கவுண்டனுாரில் சேகரம் செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, கோவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை