உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கோவை: அண்ணா பல்கலை மண்டல மையத்தில் கடந்த 1 முதல் 18ம் தேதி வரை கூடைப்பந்து, கிரிக்கெட், கால் பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட போட்டிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் நடந்தது. 12–18 வயதுடைய ஆண், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பல்கலை டீன் சரவணக்குமார், ஜெர்சி, சான்றிதழ்கள் வழங்கினார். மாணவர்களின் திறமையையும், ஒழுக்கத்தையும் பாராட்டியதுடன், பயிற்சியின் வாயிலாக உடற்தகுதி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்கலை உடற்கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் சரவணமூர்த்தி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி