உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான தடகள போட்டி ;முதலிடம் பிடித்தது காவல் துறை அணி

மாவட்ட அளவிலான தடகள போட்டி ;முதலிடம் பிடித்தது காவல் துறை அணி

கோவை:நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் காவல் துறை அணி முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது.கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் அத்யாயனா பள்ளி, 63வது மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மற்றும் எட்டாவது மயில்சாமி நினைவு ஜூனியர் தடகள போட்டிகள், மூன்றாவது சங்கரன் நினைவு சீனியர் தடகள போட்டிகள் இரு நாட்கள் நடந்தது.நிறைவு விழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த போட்டியில் முதல் நான்கு இடங்கள் பெற்ற வீராங்கனைகள், 19 முதல் 22ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாநில தடகளப் போட்டியில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜெனிசியஸ் கிளப், இரண்டாம் இடத்தை யூனிக் ஸ்போர்ட்ஸ் கிளப், மூன்றாம் இடத்தை அத்லெடிக் பவுண்டேஷன், நான்காம் இடத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணிகள் பெற்றன.சீனியர் தடகள ஆண்கள் பிரிவில் காவல் துறை அணி முதலிடமும், ஜெனிசியஸ் கிளப் அணி இரண்டாம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலாவது இடத்தையும், தமிழ்நாடு காவல் துறை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. கோவை மாவட்ட தடகள தொழில்நுட்ப பிரிவு தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை