வேலைநிறுத்தம் ஊராட்சியில் பாதிப்பு இல்லை
அன்னுார்; முறையான கால முறை சம்பளம் பெற்று வரும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கான அரசு சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும், என வலியுறுத்தி, மார்ச் 12ம் தேதி கோவை மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி செயலர்களும், ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் அறிவித்தது. எனினும், அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில், 20 ஊராட்சிகளில் பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன. எந்த பாதிப்பும் இல்லை.