உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம்

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 20ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நாள் தோறும் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதணை, காலை, 10:30 மணிக்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகர் அர்ச்சனை், இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.விழாவில் இன்று (10 ம் தேதி )மாலை, 4:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.நாளை (11ம் தேதி) காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை