உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆரவாரம்

பாராட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், ‘ஹபீபி’ திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் படம் திரையிடல் நடக்கிறது. இயக்குனர்கள் கஸ்துாரி ராஜா, மீரா கதிரவன், அரவிந்தன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திரைப்படம் குறித்து எழுத்தாளர்கள் பாமரன், மு.சந்திரகுமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். இடம்:  கே.ஜி.: புத்தகத்திருவிழா கோவை கொடிசியா சார்பில், நடத்தப்படும், 10 வது புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. 400 ஸ்டால்கள், 200 பதிப்பாளர்கள், பல லட்சம் புத்தகங்கள். தினமும் இலக்கிய சொற்பொழிவு மற்றும் புத்தக வெளியீடுகள். வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இடம்: கொடிசியா வணிக வளாகம்.தேதி: 17 முதல் 26 ம் தேதி வரை: நகைச்சுவை பட்டிமன்றம் கோயம்புத்துார் புத்தகத் திருவிழா மற்றும் கோவை நகைச்சுவை சங்கம் இணைந்து வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்கிறார். ‘மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாய் இருப்பது வீட்டிலா... வெளியிலா... என்ற தலைப்பில் குருஞானாம்பிகை, கபிலா, விசாலாட்சி, செல்லகண்ணன், நாகமுத்து பாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர் அனுமதி இலவசம். இடம்: கொடிசியா அரங்கம்.தேதி: 19: ஓவியக் கண்காட்சி ‘உட்ஸ் அண்ட் ராக்’ என்ற தலைப்பில், ஓவிய கண்காட்சி நடக்கிறது. ஓவியர் வரதராஜன் வரைந்த இயற்கை மற்றும் நிலக்காட்சிகள் கொண்ட, 53 ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றள்ளன. அனுமதி இலவசம். இடம்; பீளமேடு கஸ்துாரி சீனிவாசன் அரங்கம். தேதி: 19 ம் தேதி வரை: நகை கண்காட்சி  கோவையில் மிகப்பெரிய தங்க நகைகள் விற்பனை  கண்காட்சி நடக்கிறது. இதில் இந்தியாவின் சிறந்த தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்60 க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நவீன டிசைன்களில் தங்க நகைகளை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளனர். நகைப்பிரியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இடம்: ஓட்டல் மெர்லிஸ்: தேதி: 17 முதல் 19 வரை: அதிரடி தள்ளுபடி விற்பனை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இன்டர்நேஷனல் பிராண்ட் ரெடிமேட் ஆடைகள் விற்பனை கண்காட்சி நடக்கிறது. ஷூஸ், செப்ல்ஸ், ஹேண்ட் பேக்குள் என, விதவிமாக விற்பனைக்கு உள்ளன. இங்கு வாங்கும் அத்தனை பொருட்களுக்கும், 70 முதல் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இடம்: ரேடீஸ்ஷன் புளு ஓட்டல் நவஇந்தியா: கீதாபஜன் இல்லம் தோறும் பஜனை நிகழ்ச்சி கோவை வெள்ளலுார், இடையர்பாளையம் அசோகன் ரேணுகாதேவி இல்லத்தில் கீதாபஜன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் பங்கேற்கலாம். கீதாபஜன், 8300112434,  8608112434 இடம்: வெள்ளலுார்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை