உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடந்த மாதம் ரேஷன் வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வரை வாங்கலாம்  மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்

கடந்த மாதம் ரேஷன் வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வரை வாங்கலாம்  மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்

கோவை:''ரேஷன் கடைகளில் கடந்த மாதம் பொருட்கள் வாங்காதவர்கள், வரும் 5ம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம்,'' என, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக மாதம் தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள், ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் முழுமையாக அரிசி, பாருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் விதிமுறை காரணமாக, ரேஷன் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ரேஷன் அதிகாரிகள் காரணம் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பிறகு, நிறுத்தி வைக்கப்பட்ட பொருட்கள் முழுமையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. இது குறித்து ரேஷன்கடை பணியாளர்களிடம் கேட்ட போது, பொருட்கள் வழங்காமல், 'பெண்டிங்' இருப்பதை ஒப்புக்கொண்டனர்.கார்டுதாரர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், ஆக.,31ம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுதாரர்களுக்கு, முழுமையாக பொருட்கள் வழங்கி முடிக்க வேண்டும் என, உணவு பொருட்கள் வழங்கல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.அதன் அடிப்படையில், கடந்த மாதம், 30, 31ம் தேதிகளில் ரேஷன்கடைகளில் முழு நேரமும் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், வரும் 5ம் தேதி வரை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என, மாவட்ட வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா கூறுகையில், ''ரேஷன் பொருட்கள் வாங்காத 90 சதவீத கார்டுதாரர்களுக்கு, கடந்த 31ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வாங்காதவர்கள், வரும் 5ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். இந்த மாதத்துக்கான பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வந்து விட்டன. கார்டுதாரர்கள் அதையும் வாங்கிக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை