மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
18-Aug-2024
வெள்ளலுார், மகாலிங்கபுரம், மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா காலை, 7:30க்கு மேல், 8:30 மணிக்குள் நடக்கிறது. * ஆர்.எஸ்.புரம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், காலை, 6:30 முதல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. *அன்னுார், உத்தண்டராயர் கோவிலில், காலை, 9:50 மணிக்குமேல் விழா நடக்கிறது. ஜோதிட விளக்கம்
முக்தி மார்க்கம் டிரஸ்ட் சார்பில், ஜோதிட விளக்கம், மகாளய அமாவாசை மற்றும் முன்னோர் வழிபாடு குறித்து, சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. ராம்நகர், கோதண்ட ராமர் கோவிலில், மதியம், 3:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. மினி மராத்தான்
கோவை சகோதயா பள்ளிகள் குழு சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மராத்தான் நடக்கிறது. நேரு ஸ்டேடியம் எதிரே, காலை, 7:00 மணிக்கு மினிமராத்தான் மற்றும் பேமிலி ரன் நடக்கிறது. திறப்பு விழா
கிராஸ்கட் ரோட்டில் பி.ஆர்.கிராண்ட் புதிய கிளை திறக்கப்படுகிறது. 10வது வீதியில், சென்னை சில்க்ஸ் பின்புறம் பி.ஆர்.கிராண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை, 6:00 மணிக்கு மேல் நடக்கிறது. பால்வளத்துறை பயிலரங்கு
குமரகுரு கல்வி நிறுவனம் சார்பில், பால்வளத் துறையில் தொழில்முனைவோர்க்கான பயிலரங்கம் நடக்கிறது. கால்நடை சார்ந்த புதிய தொழில்நுட்பம், செயல்பாடுகள், வணிக உத்திகள் குறித்தும் விளக்கப்படும். ரேஸ்கோர்ஸ், குமரகுரு சிட்டி சென்டர் அருகில், மாலை, 4:30 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. காசிக்கு போகலாம்
தீக் ஷா அறக்கட்டளை சார்பில், 'காசிக்கு போகலாம் வாங்க' என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் நடக்கிறது. மாதம்பட்டி, தீக் ஷா அறக்கட்டளையில், காலை, 9:45 முதல் 11:45 மணி வரை கூட்டம் நடக்கிறது. விசேஷ பூஜை மற்றும் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி யாத்திரை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். வேளாண் காடு வளர்ப்பு பயிற்சி
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் சர்வதேச வனவியல் ஆய்வு மையம் சார்பில், வனமில்லா பகுதிகளில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் குறித்த பயிலரங்கு நடக்கிறது. சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில், காலை, 9:30 முதல் மதியம், 12:00 மணி வரை பயிலரங்கு நடக்கிறது. மாணவர் சங்க ஆய்வுக்கூட்டம்
கோவை அரசு கலைக் கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கத்தின், 91வது ஆண்டு முப்பெரும் விழா விரைவில் நடக்கவுள்ளது. இதுகுறித்து விழாக்குழுவின் கலந்துரையாடல் கூட்டம், கல்லுாரி வளாகத்தில் மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது. புதிய வளாகம் திறப்பு
அன்னுார், சொக்கம்பாளையத்தில், நிதில்யம் சிறப்பு பள்ளி மற்றும் அடிலெய்டு மறுவாழ்வு மையத்தில் புதிய வளாகம், காலை, 9:30 மணிக்கு திறக்கப்படுகிறது. கலெக்டர் கிராந்திகுமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வளாகத்தை திறந்து வைக்கின்றனர். குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
18-Aug-2024