உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெய்லரை கத்தியால் குத்திய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை

டெய்லரை கத்தியால் குத்திய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை

கோவை; டெய்லரை கத்தியால் குத்திய இருவருக்கு, தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, அசோக்நகர், செட்டி வீதி பகுதியில், பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இசை கச்சேரி நடந்தது.பாட்டு பாடிய போது, அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பாரதி கண்ணன் என்பவர் நடனம் ஆடினர். இதற்கு, கூட்டத்திலிருந்த செட்டி வீதியை சேர்ந்த கவுதம், கதிர்வேல், பிரவீன்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே அடிதடி தகராறு ஏற்பட்டது.இப்பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கவுதம், கதிர்வேல், பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து, கடந்த 2019, ஜன., 19ல், பாரதி கண்ணனை சரமாரியாக கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த பாரதி கண்ணன் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.செல்வபுரம் போலீசார் விசாரித்து, மூவரையும் கைது செய்து, கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்ட கவுதம்,30, கதிர்வேல்,32, ஆகியோருக்கு, மூன்றாண்டு சிறை, தலா, 2,000 அபரதாம் விதித்து தீர்ப்பளித்தார். பிரவீன்குமார் விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை