உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்க மக்களே!

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்க மக்களே!

கிணத்துக்கடவு: கோடை காலம் நெருங்குவதால், மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளது. இதில், ஒரு சில கிராமங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வினியோகமே இல்லை. இதற்கு மாற்றாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் தண்ணீர் வழங்கப்படுகிறது.தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் தண்ணீர் தேவை அதிகரிக்கும். ஊராட்சிகளில் உள்ள போர்வெல்லில் வரும் நாட்களில் தண்ணீர் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மக்கள் அனைவரும் தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் கிராமப்பகுதிகளில் கூடுதல் போர்வெல் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தற்போது உள்ள போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்தால், மக்களுக்கு தண்ணீர் வழங்குதில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை