கணுவாயில் வள்ளி கும்மி அரங்கேற்றம்
பெ.நா.பாளையம்:கணுவாய் தனியார் திருமண மண்டபத்தில் நவீன் பிரபஞ்ச கும்மி அரங்கேற்ற விழாவில், 500க்கும் மேற்பட்ட கும்மி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கும்மி பயிற்சியில், கணுவாய், சோமையம்பாளையம், லிங்கனூர், சோமையனூரை சேர்ந்த, 47 பெண்கள் பங்கேற்று, ஆர்வமாக வள்ளி, கும்மி மற்றும் ஒயில் கும்மியை கற்றுக் கொண்டனர். விழாவை ஒட்டி கணுவாய் கற்கிமலை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் நவக்கரை நவீன் பயிற்சி அளித்தார். அரங்கேற்றத்தில் வள்ளி பிறப்பு முதல் வள்ளி முருகர் திருமணம் வரையிலான நிகழ்வுகளை கதாபாத்திரங்களாக நடித்தும், பாட்டு பாடியும், நடனமாடியும், அரங்கேற்றம் செய்தனர். நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற அனைவருக்கும் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன. வள்ளி கும்மி ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.