மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி, நோன்பு சாட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 4ம் தேதி, கம்பம் நடும் நிகழ்வு நடந்தது.11ம் தேதி, விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கலசம் மற்றும் பூவோடு எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. நாளை, காலை 8:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடும் நிகழ்வு நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.