உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆண்களை விட பெண்கள் மன வலிமை பெற்றவர்கள்

ஆண்களை விட பெண்கள் மன வலிமை பெற்றவர்கள்

மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள டாக்டர்.ஆர்.வி.கலை, அறிவியல் கல்லூரியில், உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பாக, சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.இதில், பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் திலகம் பேசியதாவது:-அக்காலத்தில் சமையலறையிலேயே முடங்கி கிடந்த பெண்கள், இன்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். தனித்துவமும், அதிகாரமும் வர வேண்டும் என்றால் பெண்ணுக்கு கல்வி அவசியம். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் துணிவு இருந்தால் பெண்கள் எதையும் சாதிக்கலாம். இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் மன வலிமை பெற்றவர்கள். நமக்கு நாமே அழகு, மற்றவர்கள் அதனை பாராட்டத் தேவையில்லை. வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்தாலும் நல்ல கல்வியறிவு பெற்று, நல்ல சிந்தனைகளை வளர்த்து, நல்ல குறிக்கோளுடன் செயல்பட்டால் தனித்துவமாக நம் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். நல்ல உடல் பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் இன்றைய பெண்களுக்கு அவசியம். அதிகமாக மொபைல் போனில் நேரத்தை செலவிடாமல், தினசரி செய்தித்தாள் வாசித்தல், நல்ல புத்தகங்கள் படித்தல், வாழ்க்கையில் உயர்ந்தவர்களுடைய வரலாற்று நுால்களை படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். கெட்ட எண்ணங்கள் தவிர்த்து மனம் முழுக்க அன்பிருந்தால் உள்ளம் அமைதி அடையும்.இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவில் கல்லுாரி முதல்வர் ரூபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி