உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.ஆர்.பி.எப்.,கல்லுாரியில் மகளிர் தின விழா

சி.ஆர்.பி.எப்.,கல்லுாரியில் மகளிர் தின விழா

பெ.நா.பாளையம்; கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சி.ஆர்.பி.எப்., குடும்ப நல சங்கத்தின் பிராந்திய தலைவர் ரெபேக்கா விழாவை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதல்வர் லாங்சின்குப் தலைமை வகித்து பேசுகையில், ''பெண்களுக்கு சம உரிமைகள், அதிகாரம், சம வாய்ப்புகள் தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உருவாகி வருகிறது. பெண்களுக்கான வளமான எதிர்காலம் காத்திருக்கிறது'' என்றார். விழாவையொட்டி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டி, லெமன் இன் ஸ்பூன், சாக்குப் போட்டிகள், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், லக்கி ட்ரா உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி