மேலும் செய்திகள்
பெண் தொழிலாளர்கள் கவுரவிப்பு
08-Mar-2025
கோவை: துடியலுார், ஸ்ரீ கணபதி மார்ட் ஷோரூமில், பெண் பணியாளர்களுக்காக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.துடியலுார் காவல் நிலைய ஆய்வாளர் லதா, அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இந்திராணி ஷோபியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தன்னம்பிக்கையூட்டும் வகையில் சிறப்புரையாற்றினர். விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை, ஸ்ரீ கணபதி மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கணபதி மற்றும் நிறுவனத்தின் பொது மேலாளர் அகிலன் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.
08-Mar-2025