மேலும் செய்திகள்
கோவை அரசு பள்ளிகள் தேர்ச்சியில் முன்னேற்றம்
10-May-2025
சூலுார் : பிளஸ் 2 தேர்வில், அரசூர் மற்றும் அன்னுார் மேல்நிலைப் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், சூலூர் வட்டாரத்தில் உள்ள அரசூர் மற்றும் காங்கயம்பாளையம் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று,100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.சின்னியம்பாளையம், கண்ணம் பாளையம், சூலுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல், சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய, 125 பேரில்,121 வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்,167 பேர் தேர்வு எழுதினர். இதில், 159 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 95.2 ஆகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 120 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சிவ சக்திக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 39 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு உதவி பெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தலைமை ஆசிரியை ஸ்ரீ ஆண்டாள் தெரிவித்தார்.
10-May-2025