உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  11 தாசில்தார்கள் இடமாற்றம்

 11 தாசில்தார்கள் இடமாற்றம்

கோவை: தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிகாரிகள் தங்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதியில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், வரும் மே 31ம் தேதியுடன் மூன்றாண்டு பணிக்காலத்தை நிறைவு செய்பவர்கள், கட்டாயம் மாற்றப்பட வேண்டும் என, தேர்தல் கமிஷன் கெடு விதித்துள்ளது. இதன் அடிப்படையில், மாவட்டத்தில் 11 தாசில்தார்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,சமூக பாதுகாப்புதிட்டம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தாசில்தார்கள்மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை