12 மழலையர் பள்ளிகள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
கோவை; கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து, ஜூன் முதல் பல்வேறு கட்டங்களாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) புனித அந்தோணியம்மாள் கூறுகையில், ''அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பள்ளிகள் தரப்பில் பதில் அளிக்கப் பட்டுள்ளன. தற்போது 22 பள்ளிகள் அங்கீகாரம் பெற முன்வந்துள்ளன. அதில், 12 பள்ளிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன. பள்ளிகளை மூடாமல், அரசின் விதிமுறைகளின் படி, அங்கீகாரம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.