உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 11,425 பேருக்கு 12.63 கோடி ரூபாய்

 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 11,425 பேருக்கு 12.63 கோடி ரூபாய்

கோவை: தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 11,425 பயனாளிகளுக்கு, முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் பவன்குமார் அறிக்கை: பெண் குழந்தைகளுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், தமிழக அரசு 'பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்' என்ற சிறப்புத்திட்டத்தை துவங்கியது. இத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2021-2025 வரை கோவை மாவட்டத்தில், 5,052 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000- மதிப்பிலான வைப்புநிதி பத்திரங்கள் ரூ.12.63 கோடி பெற்று வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், 11,425 பயனாளர்களுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி