டிராக்டர் கவிழ்ந்து 19 பேர் காயம்
சூலுார்; சுல்தான்பேட்டை அடுத்த நகர களத்தையில் உள்ள, தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து, தேங்காய் நார் மஞ்சி லோடு ஏற்றிக்கொண்டு, டிராக்டர் வடுகபாளையம் நோக்கி சென்றது. ஆறு குழந்தைகள், ஒன்பது பெண்கள், நான்கு ஆண்கள் சென்றனர். ராஜன் என்பவர் டிராக்டரை ஓட்டினார்.வலசுபாளையம் பிரிவு காளான் கம்பெனி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், குழந்தைகள் உட்பட, 19 பேரும் காயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.