2.5 கிலோ வெள்ளி ரூ.1.5 லட்சம் பறிமுதல்
போத்தனுார்; மதுக்கரை அடுத்து கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடி எதிரே, க.க.சாவடி போலீஸ் எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார் ஹரி, பாண்டிகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கேரளா நோக்கி பைக்கில் வந்த இருவரை விசாரித்தனர். கேரள மாநிலம், திருச்சூர், செர்ப்புவை சேர்ந்த அஜயன் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஷஷாப் குட்டா, மகபூப் நகரைச் சேர்ந்த முகமத் வலியுதீன் என தெரிந்தது. அவர்களிடம் இருந்த பேக்கை சோதனையிட்டதில், 100 கிராம் எடை கொண்ட, 25 வெள்ளி கட்டிகள் (2.5 கிலோ), ரூ.1.5 லட்சம் ரொக்கம் இருந்தன. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அவர்கள், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.