2ம் நிலை காவலர் பணியிடம் இரு நாட்கள் மாதிரி தேர்வு
கோவை: இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், 3,665 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு வரும் 9ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருவோருக்கு, இலவச மாதிரி தேர்வுகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால், நாளை மற்றும் 2ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதிரி தேர்வு முடித்த அன்றே, தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண் விபரங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 93615 76081, 94990 55937 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெற வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.