உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று 2ம் கட்ட கலந்தாய்வு

 இன்று 2ம் கட்ட கலந்தாய்வு

கோவை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 2026 -27ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 5 முதல் 11ம் தேதி வரை நடந்தது. கல்லுாரியில் மொத்தம் 1,727 இடங்கள் உள்ள நிலையில், 1,594 மாணவர்கள் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். பல்வேறு பாடப்பிரிவுகள் மற்றும் சமூகப் பிரிவுகளில் காலியாகவுள்ள 133 இடங்களை நிரப்புவதற்காக, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 230 மற்றும் அதற்கு மேற்பட்ட 'கட்- ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். வணிகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட கலைப் பாடங்களிலும், சில அறிவியல் பாடப்பிரிவுகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் காலியாக உள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை