மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து பணம் திருட்டு
17-Jul-2025
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே அதி வேகமாக சென்ற கார் மோதி, இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட, 3 பேர் காயம் அடைந்தனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் மயில்சாமி, 70; விவசாயி. இவர் நேற்று முன்தினம் கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே காரில் வேகமாக சென்றார். அப்போது திடீரென்று எதிரே வந்த மொபட் வாகனம் மற்றும் அதன் பின்பு வந்த ஸ்கூட்டர் மீது மோதினார். இதில், மொபட் ஓட்டி வந்த ஆறுச்சாமி, 53, காலில் பலத்த காயமடைந்தார். இதேபோல ஸ்கூட்டரில் வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவியர் ரீனா,19, கிருத்திகா,19, ஆகியோருக்கும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கார் விபத்தை ஏற்படுத்திய மயில்சாமியை பிடித்து பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Jul-2025