உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 மரங்கள் மறுநடவு செய்யப்பட்டது

3 மரங்கள் மறுநடவு செய்யப்பட்டது

மேட்டுப்பாளையம்:காரமடை நகராட்சி சார்பில் 3 மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாய் ஏற்படுத்தும் பணி துவங்கியது. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒரு சில மரங்கள் தடையாக இருந்தது. இதை தொடர்ந்து காரமடை நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அந்த பணிகளுக்கு தடையாக இருந்த மூன்று மரங்களை அப்படியே வேருடன் பிடுங்கி காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள நகராட்சிக்குட்பட்ட இடத்தில் மறு நடவு செய்யப்பட்டது. இதனால் 3 மரங்களுக்கு மறு வாழ்வு கிடைத்தது.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ