உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 314 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

314 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை; போலீசார் நடத்திய சோதனையில், ஒரே நாளில், 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவையின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார், நேற்று தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் குறித்து சோதனை நடத்தினர்.இதில், கோவை வடவள்ளி இடையர்பாளையம் பகுதியில் இருந்த குடோனில் குட்கா, பான்பராக் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த, 210 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கி வைத்திருந்த சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்த விஷ்ணுகுமார், 51, வடகோவையை சேர்ந்த சங்கர், 48, அவர் மனைவி சுமதி, 48 ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல், கரும்புகடை போலீசார் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்த ஒரு கடையில் நடத்திய சோதனையில், 104 கிலோ குட்கா பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது.இதையடுத்து, குட்கா விற்பனையில் ஈடுபட்ட கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாயை சேர்ந்த ஜாகீர் உசைன், 42, பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 37 ஆகியோரை கைது செய்தனர்.பீளமேடு போலீசார், பேக்கரியில் குட்கா விற்ற ஆவாரம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த பெருமாள், 53 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 224 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ