மேலும் செய்திகள்
'புதிய முயற்சிகளை தொடர வேண்டும்'
06-Jan-2025
கோவை; நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 34வது பட்டமளிப்பு விழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.ஆயிரத்து 584 இளநிலை மற்றும் 263 முதுநிலை என பட்டபடிப்பு முடித்த ஆயிரத்து 846 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
06-Jan-2025